புத்ராஜெயா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- பிரதமரின் பதவிக் காலத்தைப் பத்தாண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் அரசியல் நிதிச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் விரிவாக கலந்தாலோசிக்கும்.
இதில் மாநில அளவிலான பதவிகள் இடம்பெற வாய்ப்புள்ளதால், இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
''ஏனெனில், நாங்கள் கொண்டுவர விரும்பும் அரசியல் கட்சிகள் அரசியல் நிதிச் சட்டத்தின்படி உள்ளன. அல்லது பிரதமரின் இரு தவணை பதவிக்கால அடிப்படையில் நாங்கள் ஆய்வு செய்ய விரும்பினால், அது மாநில அளவில் மூத்த அமைச்சர்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்'', என்று அவர் கூறினார்.
இன்று, புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் கீழ் சட்ட விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)