ஜோகூர் பாரு, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜோகூர் சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டு புத்தாக்கம், முதலீடு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி இரு முக்கிய திட்டங்களை ஜோகூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜோகூர் நிதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் JS-SEZ-க்குள் ஆசியான் தொழில்துறை பூங்கா ஒன்றை உருவாக்குதல் ஆகியவை முதன்மை திட்டங்களாகும் என்று அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கசி தெரிவித்தார்.
இன்று, ஜோகூர், ஜோகூர் பாருவில் JS-SEZ கூட்டு வணிகம் மற்றும் முதலீட்டு விவாதத்தில் கலந்துகொண்ட டத்தோ ஓன் ஹஃபிஸ் கசி அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)