ஜெர்மனி, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- பண்டேஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி குறித்த செய்திகள்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செயிண்ட் பொலி அணியைத் தோற்கடிக்கும் இலக்கில் களமிறங்கிய பாயர் லெவர்குசன் 1-1 என்று அதன் சொந்த அரங்கில் சமநிலை முடிவை எதிர்கொண்டது.
புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாயர் லெவர்குசன் முதல் பாதி ஆட்டம் வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதன் பலனாக முதல் கோலை அது 32-வது நிமிடத்தில் போட்டது.
ஆனால், இரண்டாம் பாதி ஆட்டத்தில், செயிண்ட் பொலி அணியைத் தோற்கடிக்க பாயர் லெவர்குசன் எடுத்துக்கொண்ட கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த வேளையில், செயிண்ட் பொலி தனது ஒரே கோலை 78-வது நிமிடத்தில் போட்டு ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.
நேற்று நடைபெற்ற மற்றுமோர் ஆட்டத்தில் பட்டியலில், பத்தாம் இடத்தில் உள்ள ஆக்ஸ்பர்க் கோல்கள் ஏதுமின்றி Eintracht Frankfurt உடன் சமன் கண்டது.
முதல் பாதி ஆட்டம் மிதமாக இருந்த வேளையில், இரண்டாம் பாதி சற்று கடுமையாக மாறியது.
ஆனாலும், பல முறை கோல் எல்லைக்குள் வந்த பந்துகளை இரு தரப்பின் கோல் காவலர்களின் அதிரடியாக தடுத்து நிறுத்தியதால் ஆட்டம் கோல்களின்றி முடிந்தது.
இதனிடையே, ஏழாவது இடத்தில் இருக்கும் பொருசியா டொர்ட்மென்ட் 3-2 எனும் கோல் எண்ணிக்கையில் Monchengladbach அணியை வீழ்த்தியது.
இரு தரப்பும் ஆட்டத்தை மாறி மாறி ஆக்கிரமித்த வேளையில் பொருசியா டொர்ட்மென்ட் அணியின் மூனறு கோல்களும் முதல் பாதியில் அடிக்கப்பட்டு சொந்த அரங்கில் அது வெற்றிப் பெற்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]