பொது

அமெரிக்க வரி விதிப்பு; மே 5-இல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

22/04/2025 04:24 PM

புத்ராஜெயா, 22 ஏப்ரல் (பெர்னாமா) --   மலேசியா உட்பட உலக நாடுகளுக்கு அமெரிக்கா அமல்படுத்தியிருக்கும் வரி விதிப்பு தொடர்பில் வரும் மே ஐந்தாம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதனை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிபடுத்தினார்.

''உள்ளது. ஐந்தாம் தேதி? ஆமாம்'', என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையின் நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமெரிக்க வரி விதிப்பு குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்தாலோசிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)