பொது

போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து ஆடவர் விடுதலை

22/04/2025 04:40 PM

மலாக்கா, 22 ஏப்ரல் (பெர்னாமா) --   கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 10.8 கிலோகிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பொருள் அனுப்பும் சேவையின் முன்னாள் பணியாளர் ஒருவரை, இன்று, மலாக்கா உயர் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்த நிலையில், அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

தற்காப்பு வாதத்தின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டிருந்த யீ கொக் சோங்கிற்கு எதிரான வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி தற்காப்பு தரப்பினர் நிரூபித்திருப்பதால், நீதிபதி டத்தோ முஹமட் ரட்ஸி அப்துல் ஹமிட் அத்தீர்ப்பை அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்தும் நீதிபதி இம்முடிவை எடுத்தார்.

யீயுடன் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய சாட்சியாளர் ஒருவரை அரசு தரப்பு அழைக்கத் தவறியுள்ளது.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வாதங்களை முன்வைப்பதில் அத்தரப்பு தோல்வியடைந்துள்ளது.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)