புத்ராஜெயா, 23 ஏப்ரல் (பெர்னாமா) -- வரும் மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவை சிறப்புக் கூட்டம் மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பரஸ்பர வரி விவகாரம் குறித்த கருத்துக்களை வழங்க அரசாங்கத் தரப்புக்கும் எதிர்கட்சிக்கும் ஒரு தளமாக அமையும்.
அக்கூட்டம் காலை மணி 11-க்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிக்கையுடன் தொடங்கி, பின்னர் விவாதம் இடம்பெறும் என்று மடானி அரசாங்க பேச்சாளரும் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''விவாதத்தின்போது அரசாங்க ஆதரவாளர்களும் எதிர்கட்சி தரப்பும் தங்களின் கருத்துக்களை முன்வைப்பதைக் காண முடியும். பின்னர், முதலீடு, தொழில்துறை மற்றும் நிதி அமைச்சர் அதை (விவாதத்தை) நிறைவு செய்து வைப்பார்'', என்று அவர் கூறினார்.
இன்று, அந்தச் சிறப்புக் கூட்டம் குறித்தத் தகவலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பரஸ்பர வரி விவகாரம் குறித்து கலந்துரையாட வரும் மே 5ஆம் தேதி மக்களவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் நேற்று உறுதிப்படுத்தி இருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)