இஸ்தான்புல், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- துருக்கி இஸ்தான்புலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குறைந்தது 236 பேர் காயமடைந்தனர்.
ரிக்டர் அளவை கருவியில் 6.2-ஆக அந்நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
இஸ்தான்புலில் உள்ள சிலிவ்ரி எனும் மாவட்டத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்தது.
உள்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் மணி 12.49-க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அருகில் உள்ள மாவட்டங்களிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்டிடங்களில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டமைப்பு சேதம் குறித்து மொத்தம் 378 புகார்கள் பெறப்பட்டன அந்நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)