உலகம்

இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத பதிலடி - மோடி

24/04/2025 06:52 PM

புது டெல்லி, 24 ஏப்ரல் (பெர்னாமா) - இந்தியாவில் தாக்குதல் மேற்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும் என்று அதன் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

''இன்று, பீகார் மண்ணிலிருந்து நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு கண்காணித்து, தண்டிக்கும்,'' என்றார் மோடி.

இன்று, பீகாரில் 13,480 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றும் போது மோடி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)