ரோம், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- காலஞ்சென்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சின் இறுதி சடங்கு தற்போது நடைபெறுகிறது.
இத்தாலி ரோம், வெட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் அவரின் இறுதி சடங்கில் சுமார் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
செயின்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலாயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் நல்லுடல் இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர், அந்நாட்டு நேரப்படி காலை மணி 10-க்கு இறுதி சடங்கு முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது.
செயின்ட் மேரி மேஜர் பெசிலிக்கா தேவாலாயத்தில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.
இந்த இறுதி சடங்கில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எம்மெனுவெல் மெக்ரொன் உட்பட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இறுதி சடங்கிற்கு வழி விடும் வகையில் அவரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த பேழை மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.
இறுதிச் சடங்கிற்கான தயார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பேழை மூடப்பட்டது.
அதன் பின்னர், பேழை முத்திரையிடப்பட்டது.
88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ் பக்கவாதத்தால் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]