புத்ராஜெயா, 28 ஏப்ரல் (பெர்னாமா) -- பருவநிலை மாற்ற விவகாரத்தை அனைத்து தரப்பினரும் கடுமையாக கருதுவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு மலேசியாவும் ஆதரவு அளித்துள்ளது.
''பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் முஹமட் முய்சு மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை மதிக்கவும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நிலைப்பாட்டை இந்நாடு கொண்டுள்ளது. இதில் நாங்கள் அவருக்குத் துணையாக இருப்பதுடன் மிகுந்த ஆர்வத்துடனும் அதைப் பின்பற்றுகிறோம்'', என்று அவர் கூறினார்.
மாலத்தீவின் இம்முயற்சிக்கு மலேசியா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், வருங்கால தலைமுறையினருக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, பருவநிலை மாற்றப் பிரச்சனைகளில் நெருக்கமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)