பொது

செராஸ் சமூக நல இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட 18 பேர் சமூக நலத்துறையின் தற்காலிக பராமரிப்பில் உள்ளனர்

28/04/2025 06:54 PM

கோலாலம்பூர், 28 ஏப்ரல் (பெர்னாமா) -  செராஸில் உள்ள ஒரு சமூகநல இல்லத்திலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட18 பில்ளைகள் தற்போது சமூக நலத்துறை ஜேகஎம்-இன் தற்காலிக பராமரிப்பில் உள்ளனர். 

மீட்கப்பட்டவர்களில்12 சிறுவர்கள ஆண்கள் என்றும் இதர அறுவர் சிறுமிகள் என்றும் சிலாங்கூர் பெண்கள் மேம்பாடு சமூக நலக் குழுவின் தலைவர் அன்ஃபால் சாரி கூறினார்.

தற்போது அச்சிறுவர்களின் உறுவினர்களைக் கண்டறியும் பணியில் ஜேகேஎம் துரிதமாக ஈடுபட்டுள்ளதுடன், அத்தகையோரைக் கண்டறிந்தால் அவர்களைப் பராமரிக்க சரியான மற்றும் தகுதியான தரப்பினரிடம் அச்சிறார்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்  அவர் கூறினார்.

இதனிடையே, கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில்  உள்ள ஒரு சிறார் பராமரிப்பு காப்பகத்தில் சிறுவர்கள் தவறாக நடத்தப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதைத் தொடந்து அதை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையின்றில் கூறப்பட்டிருந்தது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)