உலகம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்

28/04/2025 07:07 PM

மனிலா, 28 ஏப்ரல் (பெர்னாமா) --   பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால், சுமார் 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகை சூழ்ந்தது.

இதனால், புலுசான் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள், எரிமலை இருக்கும் இடத்தை விட்டு சற்று தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது குறைவாக காணப்படும் எரிமலையின் சீற்றம், பின்னர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, எரிமலையியல் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று அதிகாலை 4.36 மணிக்கு எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள புலுசான் எரிமலை அதிகமான சீற்றத்தை வெளியேற்றும் மலையாக கருதப்படுகின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)