அரசியல்

ரஃபிசிக்கு வழங்கப்படும் விடுமுறை; எந்தப் பிரச்சனையும் இல்லை - பிரதமர் விளக்கம்

02/05/2025 04:42 PM

பண்டார் சௌஜானா புத்ரா , 02 மே (பெர்னாமா) - சில நாட்கள் விடுமுறை வழங்குவதால், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லிக்கு மே மாத இறுதி வரையில் விடுப்பு வழங்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு பதிலளித்தார்.  

''ரஃபிசிக்கு வழங்கப்படும் சில நாட்கள் விடுமுறையால் எந்தப் பிரச்சனையும் இல்லை. நானும் சில நாட்களுக்கு விடுமுறையைத் தேடுகிறேன். கிடைக்குமா? நான் இன்னும் விடுமுறை எடுத்து கொள்ளவில்லை. எனக்கு சில நாட்கள் விடுமுறை வேண்டும். அதை நான் சமர்ப்பித்த பின்னர் எனக்கு சில நாட்கள் விடுமுறை கிடைக்குமா? மிக்க நன்றி,'' என்றார் அவர்.  

இன்று சிலாங்கூர், பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு நகைச்சுவையாகக் கூறினார்.  

இதனிடையே, ரஃபிசிக்கு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாகவும், அரசாங்கத்தின் பொறுப்பில் அவர் தொடர்ந்து நிலைத்திருப்பார் என்றும் முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்திருந்தார். 

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)