புதுடெல்லி, 02 மே (பெர்னாமா) - பஹல்காமில் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷா, நாட்டின் "ஒவ்வொரு அங்குலத்திலிருந்தும்" தீவிரவாதத்தை ஒழிக்க தாம் உறுதி கொண்டுள்ளதாக கூறினார்.
காஷ்மீரின் பஹெல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த பகுதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்த அக்கும்பல், அவர்களின் பெயர்களை கேட்டு, அதில் இந்துக்களை மிக அருகில் வைத்து சுட்டுக் கொன்றதாக அதிகாரிகளும், அந்த அசம்பாவிதத்தில் உயிர் பிழைத்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)