உலகம்

மணிலாவில் வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி

02/05/2025 06:42 PM

மணிலா, 02 மே (பெர்னாமா) -- வடக்கு பிலிப்பைன்ஸில் டோல் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்தால் சில வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 37 பேர் காயமடைந்ததவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

மணிலா தலைநகர் சுபிக்-கிளார்க்-டார்லாக் நெடுஞ்சாலையில் நண்பகல் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் ஒரு லாரி மற்றும் பயணிகள் பேருந்து உட்பட ஐந்து வாகனங்கள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலிட் நார்த் பஸ் டிரான்சிட் இன்க் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநர், வாகனத்தை செலுத்தும் போது தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டதாக ஜி.எம்.ஏ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)