ரியோ டி ஜெனெய்ரோ, 02 மே (பெர்னாமா) -- பிரேசில் நாட்டைச் சேர்ந்த, உலகின் அதிக வயதான பெண், இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 116 ஆகும்.
1908-ஆம் ஆண்டில் பிறந்த 116 வயதுடைய இனாஹ் கனாபாரோ லுகாஸ்வ் தமது 26-ஆவது வயதில் கன்னியாஸ்திரியாக துறவு வாழ்க்கையை வாழ தொடங்கினார்.
இதனிடையே, இனாஹ் கனாபாரோ லுகாஸ்வ் காலமானதைத் தொடர்ந்து, உலகின் அதிக வயதான பெண் பட்டம், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)