உலகம்

சிங்கப்பூரில் வாக்களிப்பு தொடங்கியது

03/05/2025 11:19 AM

சிங்கப்பூர், 03 மே (பெர்னாமா) -- இன்று காலை மணி 8 அளவில் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன.

இங்கு 27 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

சுமார் 1,240 வாக்களிப்பு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இரவு எட்டு மணிக்கு மூடப்படும்.

காலை வேளையில் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்கு, நண்பலில் வாக்களிக்க வரும்படி, தேர்தல் இலாகா ELD மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

இதனிடையே, சிங்கப்பூருக்குள் வாக்களிப்பதைத் தவிர, 10 வெளிநாட்டு வாக்களிப்பு மையங்கள் அந்தந்த நகரங்களில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை செயல்படும்.

துபாய், லண்டன், வாஷிங்டன் டி.சி, நியூ யார்க், சான் பிரான்சிஸ்கோ, கான்பெர்ரா, டோக்கியோ, பெய்ஜிங், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் வெளிநாட்டுக்கான வாக்களிப்பு மையங்கள் செயல்படுகின்றனர்.

சுமார் 18,389 சிங்கப்பூர் நாட்டினர் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)