புத்ராஜெயா, 04 மே (பெர்னாமா) -- சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று, மக்கள் செயல் கட்சியின் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங்க்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
புதிய தவணையில் தலைமைப் பொறுப்புகளைத் தொடர தமது சகாவான லாரன்ஸ் வோங் மற்றும் அவரின் சக ஊழியர்களுக்கு அன்வார் இன்று தமது முகநூலில் வாழ்த்துப் பதிவிட்டார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரின் செழிப்பும் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை.
ஏனெனில் இரு நாடுகளும் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், நெருங்கிய உறவாலும் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் அனைத்து மட்டங்களிலும் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொண்டு வரும் நிலையில், இது உலகளாவிய அமைப்பு மற்றும் அனைத்துலக வர்த்தகத்திற்கு பெரும் சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய அடித்தளமாகவும் அமையும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)