மணிலா, 04 மே (பெர்னாமா) -- பிலிப்பைன்ஸ், மணிலாவின் நினாய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தின் நுழைவாயிலில், இன்று கார் மோதிய சம்பவத்தில் நான்கு வயது சிறுமி உட்பட இருவர் கொல்லப்பட்டன வேளையில், பலர் காயமடைந்தனர்.
வேகமாக வந்த கார், வெளிப்புறத் தடுப்புச் சுவரை உடைத்து நடைபாதியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பொது மக்களிடையே எழுந்துள்ள குழப்பதையும் விமான நிலையம் அறிந்திருக்கின்றது.
ஊகங்களைத் தவிர்த்து அதன் அண்மைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதால் பொதுமக்கள் பொறுமையாக இருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததை, சம்பவ இடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியது.
மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், வாகன ஓட்டுநர் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)