விளையாட்டு

3ஆம் முறையாக மாட்ரிட் பொது டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் சபலென்கா

04/05/2025 07:19 PM

மாட்ரிட், 04 மே (பெர்னாமா) -- மாட்ரிட் பொது டென்னிஸ் பட்டத்தை மூன்றாம் முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார் உலககின் முதன்நிலை வீராங்னை பெலாருசிவின் அரினா சபலென்கா.

இகா ஸ்வியாடெக்கை தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்த அமெரிக்காவின் கோகோ காஃப்வை கடும் சவாலுக்கு பின் வீழ்த்தி சபலென்கா வெற்றியாளரானார்.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், 6-3 என்று சபலென்கா முதல் செட்டை சற்று எளிதில் வென்றார்.

ஆனால், இரண்டாவது செட்டில், அவருக்கு எதிராக கோகோ காஃப்வை கடும் போட்டியை வழங்கினார்.

இருப்பினும், மாட்ரிட் பட்டத்தை வெல்லும் இலக்கில் போராடிய சபலென்கா 7-6 எனும் நிலையில், ஆட்டத்தை தமக்கு சாதகமாக முடித்தார்.

2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், மாட்ரிட்டில் மண்ணில் அவர் மூன்றாவது முறையாக வெற்றியாளராகி உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், அப்போட்டி வரலாற்றில் அதிக மாட்ரிட் பட்டங்களை வென்ற வீராங்னைகளில் பெட்ரா குவிடோவா உடன் சபலென்கா சமநிலை கண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)