பொது

பாகிஸ்தான் பிரதமரின் மலேசியப் பயணம் ஒத்திவைப்பு

05/05/2025 03:24 PM

கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) -- அண்மையில் காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதலினால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மலேசியாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒத்திவைத்திருக்கிறார்.

இவ்விவகாரத்தை, நேற்று தொலைபேசி அழைப்பின் மூலம் ஷாபாஸ் தமக்கு தெரிவித்ததாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். கூறினார்.

எந்தவொரு வன்முறையையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய பிரதமர், இத்தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கு, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை பரிந்துரைக்கு முழு ஆதரவு அளிப்பதாக முகநூல் பதிவில் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் தேவைப்பட்டால், பதற்றங்களைத் தணிப்பதற்கு மலேசியா தனது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான மலேசியாவின் நல்லுறவு, நாட்டின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான முக்கிய சொத்துடைமைகள் என்றும் பிரதமர் விமர்சித்தார்.

இதனிடையே, நிலைமை சீரடைந்ததும், பிரதமர் ஷெஹ்பாஸ் மலேசியாவிற்கு வருகைப் புரிவதை, தாம் அமைதியான சூழலில் வரவேற்பதாகவும் அன்வார் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ)