அரசியல்

220 கிளைகளுக்கான பி.கே.ஆர் தேர்தல் முடிவுகள் இறுதிசெய்யப்பட்டன

05/05/2025 06:23 PM

கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) - நாடு முழுவதிலும் உள்ள அனைத்து 220 கிளைகளுக்கான 2025ஆம் ஆண்டு கெஅடிலான் கட்சி தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டதோடு மத்திய செயற்குழு எம்பிபி இறுதிசெய்துள்ளது.

அனைத்து கிளைகளுக்கான செயற்குழு உறுப்பினர், மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு அளவிலான முடிவுகள் குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தேர்தல் செயற்குழுவும் அனைத்துலக இலக்கவியல் தணிக்கையாளரும் தாக்கல் செய்த முடிவில் எம்பிபி திருப்தியடைந்துள்ளதாக கெஅடிலான் கட்சி பொதுச் செயலாளர் டாக்டர் ஃபூசியா சாலே தெரிவித்தார்.   

அந்த முடிவுகள் இன்று தொடங்கி https://keputusan.keadilanrakyat.org/. என்ற அகப்பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நேற்றையக் கூட்டத்தில் ஜோகூர் பாரு பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இம்மாதம் 23 லிருந்து 25-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான கெஅடிலான் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கான தயார்நிலை பணிகளின் முக்கிய தேதிகளையும் நேற்றையக் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டது.

இம்முறை கூட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 பேராளர்கள் நேரடியாகவும் 20,000-க்கும் மேற்பட்ட பேராளர்கள் இணையம் வழியாகவும் வாக்களிக்கவுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)