அன்வோத், 07 மே (பெர்னாமா) - உலகில் இதுவரை அறியப்படாத பழைமையான கால்பந்து மைதானம் ஸ்காட்லாந்தின் அன்வோத், Kirkcudbrightshire என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான வரலாற்றுத் தகவலை விளையாட்டு வரலாற்றாளர் Ged O’Brien வெளியிட்டுள்ளார்.
தனது ஆராய்ச்சியில் 17-ஆம் நூற்றாண்டில் உள்ள ஒரு பண்ணைப் பகுதியில் கால்பந்து விளையாடப்பட்டு வந்ததற்கான ஆதாரமாக, Rev. Samuel Rutherford எழுதிய குறிப்புகளையும் அவர் இணைத்துள்ளார்.
அவர் 1627–1638ம் ஆண்டு காலப்பகுதியில் பொது மக்கள் அந்த மைதானத்தில் விளையாடி இருக்கலாம் என்பதையும் Ged O’Brien தனது கண்டுப்பிடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் ஒரு கட்டமைக்கப்பட்ட மைதானம் என்று O’Brien கூறினார்.
இதன் மூலம், உலகின் பழைமையான கால்பந்து மைதானம் ஸ்காட்லாந்தில் இருந்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்காட்லாந்தின் Stirling Castle அருகே, 1540-களில் தயாரிக்கப்பட்ட உலகின் பழைமையான கால்பந்தும் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)