வாஷிடன் டி,சி, 08 மே (பெர்னாமா) -- இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிராம் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்களையும் கருத்து வேறுபாடுகளையும் களைய தாம் உதவ முன்வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"இது மிகவும் மோசமானது. இருவரோடும் ஒத்துப்போவது எனது நிலைப்பாடாகும் இருவரையும் எனக்கு நன்கு தெரியும், இருவரும் நிறுத்துவதை நான் பார்க்க விரும்புகிறேன். இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதிகமாக கஷ்டப்பட்டுறாங்க. அதனால் இப்போது நிறுத்துவார்கள் நம்புறேன். ஆனால் இரு தரப்பையும் எனக்குத் தெரியும். இரு நாடுகளுடனும் நாங்க நல்லுறவைக் கொண்டுள்ளோம். எனவே இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என நினைக்கின்றேன். அவர்களுக்கு என்னால் ஏதேனும் உதவ முடியும் என்றால் அங்கே இருப்பேன்", என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பூசல் குறித்து ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குடெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அது உலக நாடுகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இருதரப்பும் ராணுவ நடவடிக்கைகளை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று குடெரஸ் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)