இஸ்லாமாபாட், 08 மே (பெர்னாமா) -- பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிதீர்க்கப் போவதாக பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
OPERATION சிந்தூர் எனும் பெயரில் இந்தியா மேற்கொண்ட தாக்குலுக்கான விளைவுகளை அது சந்திக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப், நேற்று மிரட்டல் விடுத்திருந்தார்.
அணு ஆயுதங்கள் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மோதலில், இந்தியாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி பதிலடி கொடுப்பதாக, பாகிஸ்தான் கூறியது.
''முந்தைய இரவு, இந்தியா ஒரு தாக்குதலை மேற்கொண்டு தவறு செய்துள்ளது, அதன் செயல்களுக்கான விளைவுகளை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை நாங்கள் பின்வாங்கிவிடுவோம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம், ஆனால் நாங்கள் துணிச்சல் மிக்கவர்கள், எங்கள் உறுதியில் நாங்கள் எஃகு போன்றவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்'', என்று அவர் கூறினார்.
வீரமரணம் அடைந்தவர்களுக்காக தாங்கள் பழிதீர்க்கப்போவதாக நேற்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, ஷேபாஸ் ஷாரிஃப் அதனக் கூறினார்.
இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலினால் சுமார் 31 பேர் கொல்லப்பட்ட வேளையில், 46 பேர் காயமடைந்திருப்பதாக பாகிஸ்தானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)