தாவாவ் , 09 மே (பெர்னாமா) -- வட்டார நாடுகளுக்கு இடையிலான பங்கையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு அடுத்த வாரம், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆசியான் கூட்டுறவு கலந்துரையாடலை ஏற்பாடு செய்யும்.
2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா, வட்டார பொருளாதார வளர்ச்சியின் அம்சங்களை மையமாகக் கொண்டு, மலேசிய தேசிய கூட்டுறவுக் கழகம், ANGKASA, இந்த கலந்துரையாடலை கோலாலம்பூரில் ஏற்று நடத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோ இவோன் பெனெடிக் கூறினார்.
இன்று, தாவாவ் நகராண்மைக் கழக சதுக்கத்தில், சபா மாநில மடானி ரக்யாட் திட்டத்தின் கண்காட்சி மற்றும் விற்பனை விழாவைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவோன் பெனெடிக் அவ்வாறு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆசியான் கூட்டுறவு கலந்துரையாடலில், அவர் முதன்மை உரையாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)