விளையாட்டு

இத்தாலி பொது டென்னிஸ்: 3-ஆம் ஆட்டத்திற்கு அல்கராஸ் முன்னேற்றம்

10/05/2025 05:27 PM

ரோம், 10 மே (பெர்னாமா) -- இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாம் ஆட்டத்திற்கு உலகின் முதல் நிலை விளையாட்டாளர் கார்லஸ் அல்கராஸ் முன்னேறினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் டுசான் லவொவிக்குடன் மோதினார்.

செர்பியாவின் டுசான் லவொவிக்குடன் நடைபெற்ற இவ்வாட்டம் அல்கராசுக்கு எளிதாகவே அமைந்தது.

இவ்வாட்டத்தில், அல்கராஸ் 6-3 6-3 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அவர், அடுத்த ஆட்டத்தில் லஸ்லோ ஜெருடன் விளையாடவுள்ளார்.

ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், கிரேக்கத்தின் ஸ்டிஃபனொஸ் சிட்சிபாஸ், பிரான்சின் அலெக்சண்டர் முல்லெருடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 6-2 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று சிட்சிபாஸ் முன்றாம் ஆட்டத்திற்கு தேர்வாகினார்.

அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளரான டேனில் மெட்வெடவ், பிரிட்டனின் கேமரன் நோரியுடன் விளையாடினார்.

இதில், எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் மெட்வெடவ் 6-4 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]