ரோம், 09 மே (பெர்னாமா) -- இத்தாலி பொது டென்னிஸ் போட்டி.
வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், பிரசிலின் இளம் ஆட்டக்காரர் ஜோவோ போன்சேகா தோல்வியடைந்தார்.
ஹங்கேரியன் ஃபேபியன் மரோசானுடன் ஜோவோ போன்சேகா விளையாடினார்.
இவ்வாட்டத்தில் 6-3 7-6 என்ற நேரடி செட்களில், ஜோவோ போன்சேகா தோல்வியடைந்தார்.
இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் வரை நீடித்தது.
ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன், இத்தாலியின் ஃபெடெரிகோ சினாவுடன் விளையாடினார்.
இதில் 6-3 6-3 என்ற நேரடி செட்களில் நவோன் வெற்றி பெற்றார்.
இரண்டாம் ஆட்டத்தில் அவர் உலகின் முதல் நிலை விளையாட்டாளர் ஜானிக் சின்னருடன் விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)