கோலாலம்பூர், 10 மே (பெர்னாமா) -- நேற்றிரவு மணி 11.59-க்கு நிறைவடைந்த கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில், கெஅடிலான் கட்சித் தலைவர் பதவிக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இருப்பினும், துணைத் தலைவர் பதவிக்கு, நுருல் இசா அன்வாரும் நடப்பு துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லிக்கு இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
2025-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு வரைக்குமான தவணைக்கு, கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட, 12 உறுப்பினர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, கெஅடிலான் இளைஞர் அணித் தலைவராக, நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முஹமாட் காமில் அப்துல் முனிம் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்த வேளையில் கெஅடிலான் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவிக்கு, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கும் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரொட்ழியா இஸ்மாயிலும் நேரடியாக மோதுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)