விளையாட்டு

இத்தாலி பொது டென்னிஸ் போட்டி; 16 ஆட்டங்களுக்கு ஜெஸ்மின் போலோனி தேர்வு

11/05/2025 06:56 PM

ரோம், 11 மே (பெர்னாமா) - இத்தாலி பொது டென்னிஸ் போட்டி.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று, இத்தாலியின் ஜெஸ்மின் போலோனி சிறந்த 16 ஆட்டங்களுக்கு தேர்வாகினார்.

துனிசியாவின் ஒன்ஸ் ஜெபோருடன் அவர் விளையாடினார்.

இவ்வாட்டத்தில்  6-4, 6-3 என்ற நேரடி செட்களில் போலோனி எளிதாக வெற்றி பெற்றார்.

அடுத்த ஆட்டத்தில், உலகின் ஐந்தாம் நிலையில் இருக்கும் போலோனி ஜெலினா ஒஸ்தாபெங்கோவுடன் விளையாடவுள்ளார்.

ஆடவருக்கான பிரிவில், அலெக்ஸ் டி மினாவுர், லுக்கா நர்டியுடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 6-4, 7-5 என்ற புள்ளிகளில்டி மினாவுர் வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)