பொது

BUDI மடானி ரோன்95 திட்டம்; மக்கள் பொது போக்குவரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவர்

29/09/2025 05:38 PM

கோம்பாக், 29 செப்டம்பர் (பெர்னாமா) -- மலிவு விலையில் கிடைப்பதாலும் பயன்படுத்த எளிதாக இருப்பதாலும் பயனர்கள் பொது போக்குவரத்திலிருந்து மாறுவதற்கு BUDI மடானி ரோன்95 திட்டம் வழிவகுக்காது. 

சொந்த வாகனங்கள் இல்லாமல், பொது போக்குவரத்தை முழுமையாக நம்பி இருக்கும் மக்கள், தங்களின் அன்றாட பயணத்திற்கு, இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

"நம்முடைய மாதந்திர பயண சீட் கட்டணம் 50 ரிங்கிட் ஆகும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அதற்கான வசதிகள் தொடர்ந்து இருக்கும் . எனவே, நான் கவலைப்படவில்லை. பெட்ரோல் நிலையத்தின் விலையைக் குறைத்தல், பொது போக்குவரத்து பயனர்களின் எண்ணிக்கையை குறைத்தல். நிச்சயமாக இது இன்னும் நிரூபிக்கப்படும். அதன் தரவுகளை நாங்கள் கண்காணிப்போம்," என்றார் அவர். 

இன்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம் TBG-இன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், லோக் அவ்வாறு கூறினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]