கோலாலம்பூர், 29 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜோகூர் டாருல் தக்சிம், ஜே.டி.தி அணியின் மூன்று ஆட்டக்காரர்கள், மலேசிய காற்பந்து லீக், எம்.எஃப்.எல் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹெக்டர் ஹெவல், ஜான் இராசபால் மற்றும் ஜோவோ ஃபிகியூரிடோ ஆகிய மூவரையும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் FIFA 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து
இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உலக நிர்வாகக் குழுவின் முடிவு குறித்து மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எம்.எஃப்.எல் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது
இதில் ஏழு தேசிய வீரர்களும் அடங்குவர்.
ஆவண மோசடியில், எஃப்.ஏ.எம்-இன் மேல்முறையீடு குறித்த முடிவை FIFA அறிவிக்கும் வரை, இந்த இடைநீக்க கால கட்டத்தில், மூன்று ஆட்டக்காரர்களும் ஜே.டி.தி கிளப்பை பிரதிநித்து விளையாட அனுமதிக்கப்படுவதில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)