விளையாட்டு

ஜப்பான் பொது டென்னிஸ் போட்டி; இறுதி ஆட்டத்தில் அல்கராஸ்

30/09/2025 06:45 PM

ஜப்பான், 30 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜப்பான் பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சும் களம் காண்கின்றனர்.

உலகின் முதன் நிலை வீரரான அல்கராஸ் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், நோர்வேயின் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தியதன் மூலம், இப்பருவத்தில் தமது 66-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான கார்லோஸ் அல்கராஸ், இவ்வாட்டத்தின் முதல் செட்டில் மந்தமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 3-6 என்றும் நிலையில் தோல்வி கண்டார்.

விட்ட இடத்தை பிடிக்க போராடியதன் பலனாக, 6-3, 6-4 என்று எஞ்சிய இரு செட்களை கைப்பற்றி வெற்றிப் பெற்றார்.

இதன் வழி ரோஜர் ஃபெடெரெர், ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது ஏடிபி இறுதிப் போட்டிகளை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)