அமெரிக்கா, 01 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்க அரசாங்கம் தற்காலிகமாக முடக்கம் கண்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் காணாததால், அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு செனட் சபையில் போதிய ஒப்புதல் கிடைக்கவில்லை.
100 பேர் கொண்ட செனட் சபையில் 60 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே, எந்தவொரு மசோதாவும் நிறைவேறும்.
கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்க அரசாங்கம் முடங்குவது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும், 1981ஆம் ஆண்டு முதல், அமெரிக்க அரசாங்கம் 15 முறை முடக்கம் கண்டிருக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)