செபு, 02 அக்டோபர் (பெர்னாமா) - செவ்வாய்க்கிழமை மத்திய பிலிப்பைன்ஸ்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 200-ஆக அதிகரித்திருக்கிறது.
ரிக்டர் அளவை கருவியில் 6.9-ஆக பதிவான இந்நிலநடுக்கத்தினால் செபு மாநிலத்தின் வடக்கே உள்ள போகோ நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்தடை மற்றும் வீடுகள் சேதமடைந்ததால் அங்கே வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ்சில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)