சிடொஅர்ஜொ, 02 அக்டோபர் (பெர்னாமா) - இந்தோனேசியா, கிழக்கு ஜாவா சிடொஅர்ஜொ எனும் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டிட இடிபாடுகளில் இன்னமும் 59 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நிலத்தடியில் சுரங்கம் தோண்டி இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மீட்புக் குழு பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தொழிநுட்பக் கருவிகளைக்கொண்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படுகிறது.
திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தில், இதுவரை ஐவர் பலியாகியிருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விபத்துகாண காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரமற்ற கட்டுமானம் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)