பெய்ஜிங், 02 அக்டோபர் (பெர்னாமா) - சீன பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு அமெரிக்காவின் எம்மா நவாரோ தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை இகா சுவியாடெக்கை தோற்கடித்து டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற எம்மா, இரண்டாம் செட்டில் 4-6 என்று தோல்வி கண்டார்.
மூன்றாம் செட்டில் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி, 6-0 என்ற புள்ளிகளில் எம்மா வெற்றி பெற்று, இகாவின் பயணத்தை முடித்து வைத்தார்.
இவர்களின் ஆட்டம் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.
நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் எம்மா, தமது சகாவான ஜெசிக்கா பெகுலாவுடன் மோதவுள்ளார்.
மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில், ஜெசிக்கா பெகுலாவும் உக்ரேனின் மார்த்தா கோஸ்யுக்கும் களம் கண்டனர்.
இந்த ஆட்டத்தில் 6-3 6-7 6-1 என்ற புள்ளிகளில் ஜெசிக்கா பெகுலா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)