உலகம்

கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிந்து விழுந்த பள்ளியின் பெரும்பகுதிகள் அகற்றம்

03/10/2025 06:01 PM

கிழக்கு ஜாவா, 03 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, கிழக்கு ஜாவா பகுதியில் இடிந்து விழுந்த பள்ளியின் பெரும் பகுதியை அகற்ற இந்தோனேசிய மீட்புக் குழு, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது. 

இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்கள் உயிர் பிழைத்ததற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை என்று கூறப்படும் நிலையில் இன்னும் சுமார் 60 மாணவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.  

அதில் சிக்கி இருப்பவர்கள் பற்றிய செய்திகளுக்காக அல்-கொசினி இஸ்லாமிய தங்கும் வசதி கொண்ட பள்ளியில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை வரையில் காத்திருந்தனர். 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னர், அவர்களை அகற்றும் நடவடிக்கைக்கு கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதாக இந்தோனேசிய மனிதவள மேம்பாடு மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பிரக்தினோ தெரிவித்தார். 

திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு மாடி கட்டிடத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அனுமதி இல்லாமல் கூடுதல் இரண்டு மாடிகள், நிர்மானிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் தரப்பு கூறியது.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]