உலகம்

டிரக்டர் குளத்தில் விழுந்ததில் சிறுமிகள் உட்பட 11 பேர் பலி

03/10/2025 06:18 PM

மத்தியப் பிரதேசம், 03 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தில், குளம் ஒன்றில் டிரக்டர் விழுந்த சம்பவத்தில் அதில் பயணித்த சிறுமிகள் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 

தசரா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீட்டிற்குத் திரும்பும் வழியில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தின் பந்தானா பகுதியில் உள்ள தற்காலிக பாலம் ஒன்றில் அந்த டிரக்டர் நிறுத்தப்பட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

24-க்கும் மேற்பட்டோர் அதில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையை வழங்கவிருப்பதாக அறிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]