காசா, 04 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவில், இவ்வாண்டில் மட்டும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக 400 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில், 101 குழந்தைகள் என்றும் அவர்களில் 80 பேர் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம், WHO குறிப்பிட்டுள்ளது.
தற்போது, நான்கு ஊட்டச்சத்து குறைபாடு நிலைப்படுத்தல் மையங்கள் மட்டுமே காசாவில் செயல்பாட்டில் இருப்பதாக, WHO குறிப்பிட்டிருந்தது.
ஊட்டச்சத்து குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தற்போது கடுமையான செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்கின்றன.
இதில் சிகிச்சை மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையும் அடங்கும்.
இவை இரண்டும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் அவசியமானவையாகும் என்று WHO தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நடப்பில் உள்ள சுகாதார வசதிகளுக்கான இடப்பற்றாக்குறை, சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதையும் கடினமாக்குகிறது.
காசாவில் தொடர்ந்து இடம்பெயர்வு உத்தரவுகளுக்கான திட்ட விநியோகம் சீர்குலைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் தடுக்கக்கூடிய உயிரிழப்பு அபாயத்தை அதிகரித்துள்ளது.
காசாவில் உணவு உதவி மற்றும் அவசர சிகிச்சைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நன்கொடையாளர்கள் உட்பட அனைத்துலக சமூகத்தை உடனடியாக கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுமாறு, WHO வலியுறுத்துகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)