விளையாட்டு

மலேசிய சுப்பர் லீக்; கிளந்தானை வீழ்த்தியது திரெங்கானு

04/10/2025 05:22 PM

கோலா திரெங்கானு, 04 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், சொந்த அரங்கில் விளையாடிய திரெங்கானு எப்சி 4-1 எனும் நிலையில் கிளந்தன் எப்சியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி, ஏழு ஆட்டங்களுக்குப் பிறகு, திரெங்கானு 13 புள்ளிகளோடு லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்கத் தொடங்கிய திரெங்கானு அதன் இரண்டாவது கோலை 29-வது நிமிடத்தில் அடித்தது.

ஆட்டத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்த திரெங்கானு ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து முதல் பாதியை 3-0 எனும் நிலைடில் நிறைவு செய்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கிளந்தான் அதன் ஒரே கோலை தி சரவணன் வழி போட்டது.

பின்னர், திரெங்கானுவின் நான்காவது கோல், 72-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

தோல்வி கண்ட கிளந்தான் எட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)