விளையாட்டு

சீனா பொது டென்னிஸ் போட்டி; அரையிறுதியில் பெகுலா

04/10/2025 05:31 PM

பெய்ஜிங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- சீனா பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா முன்னேறி இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், அவர் சக நாட்டவரான எம்மா நவாரோ உடன் கடும் போட்டியை எதிர்கொண்டு இறுதியில் வெற்றிப் பெற்றார்.

முதல் செட் ஆட்டத்தை கைப்பற்றுவதில் எம்மா நவாரோ உடன் சவாலை எதிர்கொண்ட பெகுலா 6-7 எனும் நிலையில் தோல்வி கண்டார்.

அதனை அடுத்த இரு செட்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக பெகுலா 6-2, 6-1 என்று மிக எளிதில் அந்த செட்களை வென்றார்.

உலகத் தர வரிசையில் ஏழாம் இடத்தில் உள்ள அவர், அரைறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நொஸ்கொவா உடன் இன்று மோதுகின்றார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)