உலகம்

இந்தோனேசியா: பள்ளி இடிந்த சம்பவம் இவ்வாண்டின் மிக மோசமான அசம்பாவிதம்

06/10/2025 03:50 PM

கிழக்கு ஜாவா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, சிடோர்ஜோ எனும் பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டில் இவ்வாண்டு நிகழ்ந்த மிக மோசமான அசம்பாவிதமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்ட பின்னர், மீட்புக் குழுவினரால் இன்றுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, இந்தோனேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனமான BNPB தெரிவித்தது.

பள்ளியின் கான்கரிட் கட்டமைப்பு இடிந்து, விடுதியில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண் மாணவர்கள் மீது விழுந்ததில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து வரும் வேளையில், இன்னும் 13 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக BNPB துணைத் தலைவர் பூடி இர்வான் கூறினார்.

இன்றிரவு மீட்புப் பணிகள் முற்றாக நிறைவடையலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)