அலபாமா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்கா, அலபாமா தலைநகரின் மாண்ட்கோமெரியில், ஆயுதம் ஏந்திய கும்பலுக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலில் இருவர் பலியாகிய வேளையில், 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை, கவலைக்கிடமாக உள்ளது என்று மாண்ட்கோமெரி போலீஸ் தலைவர், ஜேம்ஸ் கிராபாய்ஸ் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு மணி 11.30 அளவில், பொதுமக்கள் நடுவே சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அக்குழுவில் உள்ள இரு பிரிவினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக போலீசுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், இச்சம்ப இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாகவும் கிராபாய்ஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வரை, எவரும் கைது செய்யப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)