உலகம்

டார்ஜலிங்கில் வெள்ளம் & நிலச்சரிவு ; குறைந்தது 18 பேர் பலி

07/10/2025 05:37 PM

டார்ஜலிங், 07 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவின் கிழக்கு மலைப் பகுதியான டார்ஜலிங்கில் இடைவிடாத மழை பெய்ததைத் தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய அதிகாரிகள் திங்கட்கிழமை பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை தங்களின் அதிகாரிகள் மறுசீரமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடியிருப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அலிப்பூர்துவார் மற்றும் டார்ஜலிங் உட்பட மேற்கு வங்கத்தில் சாலைகளை இணைக்கும் மற்றும் ஆறுகளைக் கடக்கும் பாலங்கள் இடிந்து விழுந்தன.

Darjeeling-இல் குறைந்தது 18 பேர் பலியாகியிருக்கும் வேளையில், பலர் காணாமல் போயுள்ளனர்.

நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மேற்கு வங்க மாநில உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)