உலகம்

பிரிட்டிஷ் பிரதமர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்

08/10/2025 07:19 PM

மும்பை, 08 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு இந்தியப் பயணத்தைத் தொடங்கினார், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், அண்மையில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், வணிகம், கலாச்சாரம் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் வரிசையில் அவரும் இணைந்துள்ளார்.

ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது பிரிட்டனும் இந்தியாவும் ஒரு சுயேட்சை வாணிப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஜவுளிகள் முதல் கார்கள் வரையிலான பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து, வணிகங்களுக்கு அதிக சந்தை அணுகலை அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பினால்,மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள், இரு தரப்பினரும் ஒரு இணக்கத்தை எட்டுவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தியதன் மூலம், மே மாதத்தில் முடிவுக்கு வந்தன.

உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், 2040ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மூவாயிரத்து 400 கோடி டாலராக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்டார்மர் நாளை, வியாழக்கிழமை மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவார்.

இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து, அடுத்த ஆண்டுக்குள் அதை நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)