ஜாலான் பார்லிமன், 10 அக்டோபர் (பெர்னாமா)-- ஐந்து லட்சம் ரிங்கிட் வரை மதிப்புடைய முதல் வீட்டை வாங்குவதற்கான பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் கடன் ஒப்பந்தங்கள் மீதான முழு முத்திரை வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வரிகள் மற்றும் கடன் நிர்வகிப்புகள் தொடர்பான கூடுதல் செலவுகளை எதிர்கொள்ளாமல் இளைஞர்களும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களும் தங்கள் முதல் வீட்டைக் கொண்டிருக்க உதவுவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
"முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு 500,000 ரிங்கிட் வரையிலான மதிப்புடைய முதல் வீட்டை வாங்குவதற்கான பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் கடன் ஒப்பந்தங்களுக்கு முழு முத்திரை வரி விலக்கு அளிக்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது," என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
பொது சேவை துறை ஊழியர்கள் சொந்த வீட்டைக் கொண்டிருப்பதை ஊக்குவிக்க தற்போதைய ஊதிய சீரமைப்பு மற்றும் சொத்துச் சந்தை விலைகள் அதிகரிப்பிற்கு ஏற்ப LPPSA நிதிக்கான அதிகபட்ச வரம்பு 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பபு இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)