பொது

வேலை கிடைத்த புதிய பட்டதாரிகளுக்கு இடமாற்ற செலவிற்கு 1,000 ரிங்கிட்

10/10/2025 09:51 PM

கோலாலம்பூர் 08 அக்டோபர் (பெர்னாமா) -- வேலை வாய்பைப் பெற்று இடம்பெயர வேண்டிய நிலையில் உள்ள புதிய பட்டதாரிகளுக்கான இடமாற்றச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக, சமூகப் பாதுகாப்பு அமைப்பான SOCSO, ஆயிரம் ரிங்கிட் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வேலை தேடுபவர்கள் அல்லது புதிய பட்டதாரிகள், புதிய இடத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், உதாரணமாக, சண்டகானில் வசித்து கோத்தா கினபாலுவில் வேலை செய்யும் நபர்களுக்கு பெர்கெசோ மூலம் 1,000 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)