பொது

நன்னெறி & நெறிமுறைக் கொள்கைகள் போற்றுவதை ஊக்குவிக்க வேண்டும்

13/10/2025 07:42 PM

கோலாலம்பூர், 13 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் கல்வி அறிவை மட்டும் வலியுறுத்தாமல் நன்னெறி மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை போற்றுவதையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  தெரிவித்தார்.

அந்த பலவீனங்கள் பகடிவதை பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என்பதால் இவ்விரு அம்சங்களும் நாட்டின் கல்வி செயல்முறையில் சமநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

''நான் பகடிவதையைப் பற்றி பேசுகிறேன். கல்வி, கல்வி அறிவு. மதிப்புகள் இல்லை. நன்னெறி பண்புகள் மற்றும் நெறிமுறை கொள்கைகள் இல்லை. எனவே, குறைபாடுகள் உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர் தவறு மட்டும் அல்ல. ஆனால், செயல்முறை,'' என்றார் அவர்.

பகடிவதை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் உட்பட சமீபத்தில் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடு பிரச்சனைகள் குறித்து அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கருத்துரைத்தார்.

ஆசிரியர்கள் மீது மட்டும் குறை என்று சுட்டிக் காட்ட முடியாது. மாறாக, பெற்றோர் மற்றும் நாட்டின் கல்வி செயல்முறையும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)