உலகம்

தெற்கு கரோலினாவில் உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

13/10/2025 07:44 PM

தென் கரோலினா, 13 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று ஞாயிற்றுக்கிழமை, தெற்கு கரோலினா தீவிலுள்ள நகரத்தில் உணவகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர்.

மேலும், 20 பேர் காயமடைந்ததாக, பியூஃபோர்ட் நகர ஷெரிஃப் அலுவலகம் அறிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாலை 1 மணி அளவில் விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டதாக ஷெரிஃப் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சூடு பட்டவர்களில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஷெரிஃப் அலுவலகம் தொடந்து விசாரணை நடத்தி வரும் வேளையில், இச்சம்பவம் குறித்த மேல் விவரங்களை வழங்க மறுத்து விட்டது.

குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் வரை கொல்லப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட போவதில்லை என்று அந்த அலுவலகத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதாக தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)